அம்பலவன் பொக்கணை வீதி – 2009 வைகாசி Ambalavan Pokkanai Street, May 2009

அம்பலவன் பொக்கணை வீதி – 2009 வைகாசி

ஒரு சிற்றரசின் அல்லது பெருங்கனவின் 
இறுதி ஊர்வலம் போன
இடிந்த மணற்சாலை
 
வழியெல்லாம் 
மலம்; பிணம் ;காயம் ;சனம் ;வாகனம்  
கால்களின் கீழ் பொறிவது
கடல் மணலா? நம்பிக்கைகளா?
 
கடைசிப் பதுங்கு குழியும் 
தகர்ந்து விட்டது 
கடைசிப் பரா ஒளிக் குண்டும் 
கடலில் வீழ்ந்து விட்டது
கடைசிப் பேருந்தும் 
சரணடைந்தவர்களை ஏற்றிக் கொண்டு 
சென்றுவிட்டது 
கடைசிச் சொல்லையும் எடுத்துக் கொண்டு
வெளியேறு 
 

Original Poem by

Nillanthan

Translated by

Shash Trevett, Geetha Sukumaran with The Poetry Translation Workshop Language

Tamil

Country

Sri Lanka