Poems

அம்பலவன் பொக்கணை வீதி – 2009 வைகாசி

ஒரு சிற்றரசின் அல்லது பெருங்கனவின் 
இறுதி ஊர்வலம் போன
இடிந்த மணற்சாலை
 
வழியெல்லாம் 
மலம்; பிணம் ;காயம் ;சனம் ;வாகனம்  
கால்களின் கீழ் பொறிவது
கடல் மணலா? நம்பிக்கைகளா?
 
கடைசிப் பதுங்கு குழியும் 
தகர்ந்து விட்டது 
கடைசிப் பரா ஒளிக் குண்டும் 
கடலில் வீழ்ந்து விட்டது
கடைசிப் பேருந்தும் 
சரணடைந்தவர்களை ஏற்றிக் கொண்டு 
சென்றுவிட்டது 
கடைசிச் சொல்லையும் எடுத்துக் கொண்டு
வெளியேறு